ஞாயிறு, 8 மே, 2011

வரவுக்கேற்ற செலவு! - மாற்றுக் கருத்து!

மனிதன் - விசித்திரமானவன்

மனித வாழ்க்கை அற்புதமானது

சிலநூறு வருடத்திற்கு முன்
இயற்கையை ரசித்தான்
இயற்கையில் கிடைத்ததைப் புசித்தான்

வீட்டுத்தோட்டத்தில் விளைவதை உண்டு
இயல்பான வாழ்க்கை வாழ்ந்தான்...
தேவை என்பது -
உணவு உடை உறைவிடம் மாத்திரமே

காலத்தின் மாற்றம்
மனிதனின் தேவைகளும் மாற்றம்

கல்வியின் அவசியம்
வாழ்க்கையின் உயர்வு

நடைபயனம் ரத்தாகிவிட்டது
பத்தடிக்குமேல் உள்ள இடம் செல்ல
கார் தேவைப்படுகிறது

தோட்டம் மறந்தோம் -

நாமும் குளிர் சாதனத்துள் அடைக்கலம்
நம் உணவும் குளிர் சாதனப்பெட்டிக்குள்

சொகுசு வாழ்க்கைக்கு
அடிமையாகிவிட்ட சூழ்னிலையில்

எல்லாவற்றிற்கும் பணம் தேவைப்படுகிறது

மாதம் பிறந்தால்...
மின்சாரம், தொலைபேசி, தொலைக்காட்சி கட்டணங்கள்
இணைய வாடகை, பெட்ரோல் கேஸ் செலவு
பள்ளிக்கட்டணம் பட்டுப்புடவை பார் செலவு
இன்னும் என்னன்னெவோ

ஆடம்பரமென்ற அத்தனையும் இன்று
அத்யாவசமாகிவிட்டது

எல்லாம் தேவையாகிவிட்டது
இவையின்றி இனி வாழ முடியாது

தேவை... அனைத்தும் தேவை

அதற்குப் பணம் தேவை....

இன்னும் சொல்லிக்கொண்டு இருக்காதீர்கள்


வரவுக்கேற்ற செலவு செய் என்று!


மாற்றுகிறேன்...பழமொழியை ...

"செலவைக் கணக்கில் கொண்டு வரவிற்கு வழிசெய்" என்று!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக