புதன், 10 மார்ச், 2010

ஊர்க்குருவி! மாற்று(க்) கருத்து



உயரே பறந்தாலும்
ஊர்க்குருவி பருந்தாகுமா? - என்று
உரக்கப் பேசும் கவிஞர்களே...
ஊர்க்குருவி  ஏன் பருந்தாக வேண்டும்?

நற்பழங்கள் தானியங்கள்
நன்னீரருந்தும் - இக்குருவி
அழுகிய பழங்களொடு பிணங்களையும்
எச்சில் சளியென்று இன்னபிற திண்ணும்
பருந்தோடு ஒப்புமோ?

கவிதைக்கு வேண்டும் கற்பனை - ஆனாலும்
காக்கவும் வேண்டும் அதன் கற்பினை
உயரே பறந்ததனால் கர்வம் கொண்டதாய்த்
தவறாய் கற்பிதம் கொண்டோரே...

உயர்ந்தது ஊர்க்குருவிதான்
உயரப் பறந்தாலும்
உயர்வில்லாதது பருந்து.
மாற்றுங்கள் பழமொழியை

" உயர உயரப் பறந்தாலும்
ஊர்க்குருவியாகுமா பருந்து என்று.